ஆண்டிப்பட்டி அருகேபாரம்பரிய பயிர் ரக கண்காட்சி


ஆண்டிப்பட்டி அருகேபாரம்பரிய பயிர் ரக கண்காட்சி
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே பாரம்பரிய பயிர் ரக கண்காட்சி நடந்தது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே கோவில்பட்டி அரசு தென்னை நாற்றுப் பண்ணை வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு (அட்மா) திட்டத்தின் கீழ் உயர்தர பாரம்பரிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி நடந்தது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், அதனை எவ்வாறு பெறுவது, வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story