ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; 3பேர் காயம்


ஆறுமுகநேரி அருகே  மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; 3பேர் காயம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 3பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்த மோகன் மகன் ஹர்சோன் (வயது 24). அதே பகுதியில் வசித்து வரும் சரவணன் மகன் ஹரிஹரசுதன். காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு ஹரிஹரசுதன். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் மாலையில் காயல்பட்டினத்தை சேர்ந்த நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரியில் இருந்து சாகுபுரம் தொழிற்சாலை அருகே உள்ள ஆவின் பாலகத்தில் டீ குடிப்பதற்காக 3 பேரும் சென்றுள்ளனர்.

ஆறுமுகநேரி- காயல்பட்டினம் புறவழிச்சாலை நுழைவாயிலில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே சென்ற போது எதிரே வந்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் காயமடைந்தனர். உடனடியாக 3 பேரும் மீட்க்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்பவம் குறித்து ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுனரான கேரள மாநிலம் தலைச்சேரி கண்ணூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜன் மகன் ராஜேஷ்( 27) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story