ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டிகளுடன் வழிமறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு; ஆம்புலன்சில் 45 நிமிடம் சிக்கி தவித்த நோயாளி


ஆசனூர் அருகே  கரும்பு லாரியை குட்டிகளுடன் வழிமறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு;  ஆம்புலன்சில் 45 நிமிடம் சிக்கி தவித்த நோயாளி
x

ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டிகளுடன் வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆம்புலன்சில் 45 நிமிடம் நோயாளி சிக்கி தவித்தாா்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடியை அடுத்த கோடிபுரத்தை சேர்ந்தவர் மாதேவா (வயது 70). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் தாளவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆம்புலன்சை ராஜபாஜி ஓட்டினார். மருத்துவ உதவியாளராக நாகராஜ் என்பவர் இருந்தார்.

ஆசனூரை அடுத்த தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் அருகே சென்ற போது கரும்பு லாரி ஒன்றை குட்டிகளுடன் வந்த யானை ஒன்று வழிமறித்து கரும்பை பிடுங்கி தின்று கொண்டிருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதில் மாதேவா வந்த ஆம்புலன்சும் சிக்கியது. சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக கரும்புகளை சுவைத்த யானை அங்கிருந்து குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. இதனால் 45 நிமிடம் தாமதமாக ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.


Next Story