ஆத்தூர் அருகேகஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு ஜெயில்
ஆத்தூர் அருகே கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
ஆத்தூரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் வெங்கடாசலம் என்ற வெங்கடேசன் (வயது 47). இவர் கடந்த 21.8.2019 அன்று சேர்ந்தப்பூமங்கலம் செல்லும் ரோட்டில் கஞ்சாவை கடத்தி சென்றபோது ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போதை பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்ட வழக்குகளுக்கான முதன்மை அமர்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலசெல்வன், அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story