ஆத்தூர் அருகேமுத்துக்குமார் நினைவுதினம்


ஆத்தூர் அருகேமுத்துக்குமார் நினைவுதினம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே முத்துக்குமார் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆத்தூர் அருகே கொழுவைநல்லூரில் இலங்கைத்தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த முத்துக்குமார் நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலைக்கு மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கட்சி துணைப் பொதுச் செயலாளர் கலைவேந்தன், மண்டல செயலாளர் தமிழினியன், கருத்தியியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி, மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story