ஆத்தூர் அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்


ஆத்தூர் அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 7:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமி காலனியை சேர்ந்த ஜெயகாந்தன் மகன் ராமராஜன் (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் பழைய காயல் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். புல்லாவெளி அருகே சென்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் ைசக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமராஜன் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான தூத்துக்குடி அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்த வள்ளி செட்டியார் மகன் இசக்கியப்பன்(59) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story