பவானி அருகே காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
பவானி அருகே காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
பவானி
பவானி மயிலம்பாடி முருகன் கோவில் தோட்டம் அருகே உள்ள நல்லாமூப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ். விவசாயக் கூலி தொழிலாளி. அவருடைய மனைவி சிவகாமி (வயது 45). இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் வேலைக்கு செல்வதாக வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பவானி அருகே வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடனே பவானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவகாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாக முருகராஜுக்கும், சிவகாமிக்கும் இடையே ஊருக்கு செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவகாமி வீட்டை விட்டு வெளியேறி வரதநல்லூர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.