பவானிசாகர் அருகே மாணவியை கொல்ல முயன்ற வாலிபர் போக்சோவில் கைது


பவானிசாகர் அருகே   மாணவியை கொல்ல முயன்ற வாலிபர் போக்சோவில் கைது
x

போக்சோவில் கைது

ஈரோடு

பவானிசாகர் அருகே மாணவியை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தார்கள்.

கழுத்தை அறுத்தார்...

பவானிசாகர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று மாலை பவானிசாகரில் இருந்து பகுடுதுறை செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவரின் பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் வைத்து அறுத்து கொலை செய்ய முயன்றார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று தடுத்தார்கள். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி விட்டார். கத்தியால் அறுக்கப்பட்டதில் காயமடைந்து ரத்தம் வழிய நின்ற மாணவியை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.

போக்சோவில் கைது

இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபர் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் நவீன்குமார் (வயது 21) என்பதும், ஏற்கனவே இந்த மாணவியிடம் அவர் தகராறு செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் பவானிசாகர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நவீன்குமாரை கைது செய்துள்ளார்கள்.


Next Story