பவானி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
எலக்ட்ரீசியன் சாவு
பவானி அடுத்த சின்ன வடமலை பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களுடைய மகன் மயில்சாமி (வயது 23). எலக்ட்ரீசியன். ஜம்பை கருக்குபாளையம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் நூல் நூற்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
பட்டறையில் உள்ள யு.பி.எஸ். எந்திரத்தை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க மயில்சாமியை அவர் அழைத்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு மயில்சாமி யு.பி.எஸ். எந்திரத்தை மாற்றி அமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயில்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து மயில்சாமியின் தாய் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.