புவனகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


புவனகிரி அருகே  தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

புவனகிரி அருகே உள்ள சின்ன நெல்லி கொல்லையை சேர்ந்தவர் குமார் மகன் சிற்றரசன் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது தாய் தமிழரசியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சிற்றரசன் தனது வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிற்றரசன் ஏற்கனவே 4 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காப்பாற்றி உள்ளனர். இந்த நிலையில் தற்போது 5-வது முறையாக தற்கொலைக்கு முயன்ற போது அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story