போடி அருகே பாத்திரங்களுக்கு வாடகை தராததால் தகராறு: வாலிபர் கைது
போடி அருகே பாத்திரங்களுக்கு வாடகை தராததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 48). பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். போடி அருகே மீனாட்சிபுரம் கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்த ஹிட்லர் மகன் பாண்டீஸ்வரன் (18). இவர், தனது வீட்டு விேசஷத்திற்கு ராஜாவிடம், பாத்திரங்கள் வாடகைக்கு எடுத்துள்ளார். விேசஷம் முடிந் ததும் பாத்திரங்களை திருப்பி தரும் போது வாடகை தருவதாக கூறினார். ஆனால் பாண்டீஸ்வரன் வாடகை தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இவர், தர்மத்துப்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா பாத்திரங்களுக்கான வாடகை பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன், ராஜாவை தகாத வார்த்தைகளால் பேசி அவருடன் தகராறு செய்தார். இதுகுறித்து ராஜா போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாண்டீஸ்வரனை கைது செய்தனர்.