சின்னமனூர் அருகே வாலிபரை குத்திக்கொன்ற வழக்கில் 6 பேர் கைது


சின்னமனூர் அருகே வாலிபரை குத்திக்கொன்ற வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே வாலிபரை குத்திக்கொன்ற வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது 25). இவர், தனது நண்பரான சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்த யுவராஜா என்பவரின் செல்போனை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கி சென்றார். இதையடுத்து யுவராஜா செல்போனை திருப்பி தருமாறு ஒண்டியிடம் கேட்டார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு செல்போனை திருப்பி கேட்டது தொடர்பாக ஒண்டி தரப்பினருக்கும், யுவராஜா, அவரது நண்பர் வினோத்குமார் (24) இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத் குமாரை குத்தினார். இதில் வினோத்குமாா் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர். இ்ந்நிலையில் வினோத் குமாரை கொலை செய்த ஒண்டி, கார்த்திக், அஜய், செல்வேந்திரன், மாதவன் மற்றும் செல்வா ஆகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜை தாக்கிவிட்டு அவரது செல்போனை ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் பிடுங்கி சென்றனர். இதையடுத்து செல்போனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் வினோத்குமாரை குத்தி கொலை செய்ததாக கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story