சின்னசேலம் அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் நகை-பணம் திருடியவர் கைது


சின்னசேலம் அருகே  எலக்ட்ரீசியன் வீட்டில் நகை-பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே எலக்ட்ரீசியன் வீட்டில் நகை-பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் போலீசார் இந்திலி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை போலீசார் மறித்து விசாரித்தனா். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை துருவி, துருவி விசாரித்தனர். அதில் அவர் நைனார்பாளையம் இளங்கோ தெருவை சேர்ந்த நாராயணன் மகன் சின்னையன்(வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சின்னசேலம் அருகே இந்திலி கிழக்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் எலக்ட்ரீசியனான நாகேஷ் (வயது 36) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகை ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சின்னையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story