கடலூர் அருகே வனத்தீ குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


கடலூர் அருகே  வனத்தீ குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே வனத்தீ குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.

கடலூர்

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு வனத்தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி வன பாதுகாவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வனச்சரக அலுவலர் அப்துல் அமீது முன்னிலை வகித்தார். இதில் கடலூர் பெரியார் அரசு கல்லூரி, புனித வளனார் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வனத்தீ பற்றி வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். முடிவில் வனவர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story