கடலூர் அருகே ஆஞ்சநேயா் கோவிலில் திருட்டு
கடலூர் அருகே ஆஞ்சநேயா் கோவிலில் நடந்த திருட்டு தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த குமராபுரத்தில் 41 அடி பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிறிய அளவிலான காரிய சித்தி ஆஞ்சநேயருக்கு 150 கிராமில் வெள்ளி பூணூல் அணிவித்து வழிபட்டு வந்தனர். சம்பவத்தன்று சாமிக்கு அணிவித்திருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். திருடுபோன பூணூலின் மதிப்பு ரூ.8 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire