தேவதானப்பட்டி அருகேஇ-சேவை மையத்தில் திருடிய 2 பேர் கைது


தேவதானப்பட்டி அருகேஇ-சேவை மையத்தில் திருடிய 2 பேர் கைது
x

தேவதானப்பட்டி அருகே இ-சேவை மையத்தில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர், மேல்மங்கலத்தில் பஸ்நிலையம் அருகே இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு வழக்கம்போல் முத்துப்பாண்டி, இ-சேவை மையத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை மையத்தை திறக்க வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டி ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் இ-சேவை மையத்தில் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது மையம் அருேக உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் இ-சேவை மையத்தில் புகுந்து திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. பின்னர் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இ-சேவை மையத்தில் திருடியது மேல்மங்கலத்தை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 20), பிரேம் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story