தேவதானப்பட்டி அருகே வாலிபர்களை குத்திய வழக்கில் 7 பேர் கைது


தேவதானப்பட்டி அருகே வாலிபர்களை குத்திய வழக்கில் 7 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே வாலிபர்களை கத்தியால் குத்திய வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில் மோட்டார்சைக்கிள் திருடுபோனது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடந்த மாதம் 30-ந்தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது அதே பகுதியை சோ்ந்த வாலிபர்களான முத்துக்குமார், ஜெகதீஷ் ஆகிய 2 பேரை மற்றொரு தரப்பினர் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கவுதம் குமார் (வயது 30), ஜெரால்டு (32), கோபிநாத் (28), சரவணக்குமார் (29), நாக விஜயன் (28) அருண் (30), செல்வேந்திரன் (31) ஆகிய 7 ேபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story