எட்டயபுரம் அருகேபுதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு விழா
எட்டயபுரம் அருகே புதிய ரேஷன்கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் தலைமை தாங்கினார். தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி முன்னிலை வகித்தார் புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இவ்விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஸ்ரீதர், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அப்பகுதியில் நடந்த உத்தண்ட ராமன் கோவில் கும்பாபிஷேக விழாவில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story