எட்டயபுரம் அருகேமின்ஒயர்களை திருடிய வாலிபர் கைது
எட்டயபுரம் அருகே மின்ஒயர்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள முத்துலாபுரம் எம்.கோட்டூர் ஊராட்சி குடிநீர் மோட்டர் அறைக்கு மின் கம்பத்திலிருந்து இணைக்கப்படும் மின் இணைப்பு ஒயர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி திருடப்பட்டது. அன்றைய தினம் அதே பகுதியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு மின் கம்பத்திலிருந்து இணைக்கப்பட்டிருந்த ஒயர்களும், மேல்நிலைப் பள்ளிக்கு மின் கம்பத்தில் இருந்து இணைக்கப்பட்டு இருந்த ஒயர்களும் வெட்டி திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து முத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், எம்.கோட்டூர் ஆர்.சி. தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் மாரீஸ்வரன் (வயது 25) என்பவர், 3 இடங்களிலும் மின்ஒயர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த மின்ஒயர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.