கயத்தாறு அருகே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கயத்தாறு அருகே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அழகு பாண்டி. இவருடைய மகள் பூலம்மாள் (வயது 19). இவருக்கும், சவலாப்பேரியை சேர்ந்த பூல்ராஜ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பூல்ராஜ் கேரளாவில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இதனால் பூலம்மாள் தனது தாய் வீடான அய்யனாரூத்து கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பூலம்மாளுக்கு வயிற்றில் நீர்க்கட்டியால் வேதனையடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று மதியம் வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் பூலம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர். கோவில்பட்டி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.