கயத்தாறு அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
கயத்தாறு அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சிதம்பரம்பட்டி பஞ்சாயத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ஜானகி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி உதவி இயக்குனர் மருத்துவர் விஜயா முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மாடுகளுக்கு சிகிச்சை மற்றும் குடற்புழு நீக்கம், கூட்டுதல், சினை பரிசோதனை செய்யப்பட்டது. 600 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.120 கறவை மாடுகள், 700-க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு ஊசியும், 80 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் போடப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர் ராஜ்பாபு, கால்நடை ஆய்வாளர் புவனேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story