கோபி அருகே தேனீக்கள் கொட்டி 26 பேர் காயம்
கோபி அருகே தேனீக்கள் கொட்டி 26 பேர் காயமடைந்தனா்.
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள இண்டியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் சாலையோர சீரமைப்பு பணிகள் நடைெபற்று வருகின்றன. இதற்காக நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 26 பேர் சரக்கு வேனில் சென்று இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் தேனீக்கள் பறந்து வந்து 26 பேரையும் கொட்டியது. இதில் காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 25 பேர் வீடு திரும்பினர். அரசூர்புதூரை சேர்ந்த மோகனாம்பாள் (வயது 50) என்பவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்
Related Tags :
Next Story