கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார்.
கடத்தூர்
கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் உயிரிழந்தார்.
பாலிடெக்னிக் மாணவர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 36). இவர் கோபி மொடச்சூர் ரோட்டில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா (32). இவர்களுடைய மகன்கள் ராகுல் (17), சிவா (16).
இதில் ராகுல் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் விஜயா மகன்கள் ராகுல், சிவாவுடன் மேட்டுவளவு என்னும் இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்க சென்றார்.
தண்ணீரில் மூழ்கினார்
விஜயா துணி துவைத்தபோது ராகுலும், சிவாவும் வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது ராகுல் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். விஜயாவும், சிவாவும் அவரை காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்தநிைலயில் நேற்று காைல ராகுல் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில் அவருடைய உடல் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.