கோபி அருகே உள்ளமதுக்கடையை அகற்றக்கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு
கோபி அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்
ஈரோடு
கோபி அருகே உள்ள அயலூர் வெள்ளப்பாறை மேடு பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையால் அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் மதுக்கடையை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோபி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் உத்திரசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், 'வெள்ளப்பாறை மேடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் மதுக்கடையை மூட வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தனர்.
Related Tags :
Next Story