கடமலைக்குண்டு அருகேமுருக பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு


கடமலைக்குண்டு அருகேமுருக பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு
x

கடமலைக்குண்டு அருகே முருக பக்தா்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.

தேனி

கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழனி முருகனுக்கு மாலை அணிந்தனர். இவர்கள் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை மேலப்பட்டி முத்தாலம்மன் கோவில் முன்பு முருக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாலை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அப்ேபாது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குழவையிட்டபடி ஆரவாரம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பூக்குழி இறங்கிய பக்தர்கள் மேலப்பட்டி கிராமத்தில் இருந்து பாதயாத்திரையாக பழனி நோக்கி புறப்பட்டனர்.


Related Tags :
Next Story