கடம்பூர் ரெயில் நிலையம் அருகே பிணமாக கிடந்த பழ வியாபாரி
கடம்பூர் ரெயில் நிலையம் அருகே பிணமாக கிடந்த பழ வியாபாரி உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவில்பட்டி:
கடம்பூர் ெரயில் நிலையத்திற்கும், குமாரபுரம் ெரயில் நிலையத்திற்கும் இடையே ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக தூத்துக்குடியில் ெரயில்வே போலீசாருக்கு ெரயில் நிலைய அதிகாரி புகார் அளித்தார். அதன்பேரில் தூத்துக்குடி ெரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டு அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், ெரயிலில் அடிபட்டு பிணமாக கடந்த வாலிபர் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் அப்பன் ராஜ் (வயது 35) என்பது தெரியவந்தது. இவர் மோட்டார் சைக்கிளில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடம்பூர்- குமாரபுரம் ெரயில் நிலையங்களுக்கு இடையே பரம்புபேட்டை ெரயில்வே கேட் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, தண்டவாள பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு ெரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. ெரயில்வே போலீசார் அப்பன் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ெரயிலில் அடிபட்டு இறந்த கொய்யாப்பழ வியாபாரி அப்பன் ராஜ்க்கு திருமணம் ஆகி முத்துக்காளி (25), என்ற மனைவியும், மகாபாரதி (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.