கடம்பூர் அருகே 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்


கடம்பூர் அருகே  108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
x

கடம்பூர் அருகே 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பெற்றார்.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமம் குன்றி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் இவருடைய மனைவி சரிதா (வயது 31). நிறைமாத கர்ப்பிணியான சரிதாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் 108 ஆம்புலன்சில் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்சை ராஜ்குமார் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக குமரேசன் இருந்தார். குன்றி- கடம்பூர் மலைப்பகுதியில் அஞ்சனை பிரிவு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் குமரேசன், உடனடியாக சரிதாவுக்கு பிரசவம் பார்த்தார். இதில் சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.


Next Story