கடம்பூர் அருகேமாயமான வாலிபர் வனப்பகுதியில்உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்பு;சாவின் மர்மம் என்ன? போலீசார் விசாரணை
கடம்பூர் அருேக மாயமான வாலிபர் வனப்பகுதியில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவின் மர்மம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருேக மாயமான வாலிபர் வனப்பகுதியில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவின் மர்மம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்தார்
கடம்பூர் அருகே மாக்கம்பாளையம்- குன்றி செல்லும் வனச்சாலையில் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. உடனே அந்த இடத்தை நோக்கி சென்று பார்த்தனர். அப்போது அங்கு உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பின்னர் இதுகுறித்து கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினரும், போலீசாரும் அங்கு சென்று பார்த்தனர். அதன்பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவின் மர்மம் என்ன?
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வனப்பகுதியில் பிணமாக கிடந்த நபர் குன்றி புதுதொட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான குமார் (வயது 33) என்பதும், இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை வீட்டு் வெளியே சென்றவர் வனப்பகுதியில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'குமார் சாவின் மர்மம் என்ன என்று தெரியவில்லை. காட்டு யானை தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று உடல் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரியவரும்' என்றனர்.
மேலும் இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.