கழுகுமலை அருகேஆலயம் பிரதிஷ்டை விழா


கழுகுமலை அருகேஆலயம் பிரதிஷ்டை விழா
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே ஆலயம் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை - திருவேங்கடம் சாலையில் வடக்கு அய்வாய்புலிபட்டி கிராமத்தில் பெராக்கா ஐ.பி.ஏ. சபையின் புதிய ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

ஐ.பி.ஏ ஸ்தாபன தலைவர் டேவிட் பிரகாசம் புதிய ஆலயத்தை திறந்து வைத்து அபிஷேக செய்தி வழங்கினார். நிர்வாகிகள் ஜான்பவுல்ராஜ், ஆசீர்வாதம் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாவட்ட மத்திய போதகர் ஜோசுவாநித்தியராஜ், நெல்லை மாவட்ட மத்திய போதகர் பிரவீன்குமார் மற்றும் போதகர்கள் செல்வரத்தினம், ஹென்றிஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு தேவ நற்செய்தி வழங்கினர்.


Next Story