காஞ்சிக்கோவில் அருகேவாய்க்காலில் பிணமாக கிடந்தவாலிபர் சாவில் திருப்பம்;கொலை செய்த 2 பேர் கைது


காஞ்சிக்கோவில் அருகேவாய்க்காலில் பிணமாக கிடந்தவாலிபர் சாவில் திருப்பம்;கொலை செய்த 2 பேர் கைது
x

காஞ்சிக்கோவில் அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

பெருந்துறை

காஞ்சிக்கோவில் அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாய்க்காலில் பிணம்

காஞ்சிக்கோவில் அருகே உள்ள முத்துகவுண்டன்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவருடைய மகன் பூபதி (வயது 25). கடந்த 4-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவரை காணவில்லை என்று அவரது அக்காள் சரண்யா காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை தேடி வந்தனர். அப்போது பூபதி காஞ்சிக்கோவில் அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிளை வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.

கொலை

இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பூபதியை யாரோ கொலை செய்து வாய்க்காலில் வீசியுள்ளனர். அவரது சாவில் மர்மம் உள்ளது என்று போலீசில் அவரது உறவினர்கள் புகார் கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பூபதி கொலை செய்யப்பட்டது உறுதியானது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பூபதி போக்சோவில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும், அப்போது அவர் அந்த சிறுமியை திருமணம் செய்ய அவர்களது உறவினர்களான சித்தோடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (29), பரமசிவம் (50) ஆகிய 2 பேரிடம் கேட்டதும், இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து பூபதியை கொன்று வாய்க்காலில் வீசியதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விபிசி, கைது செய்யப்பட்ட விக்னேசையும், பரமசிவத்தையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story