கவுந்தப்பாடி அருகேசவுக்கு தோப்பில் தீ விபத்து


கவுந்தப்பாடி அருகேசவுக்கு தோப்பில் தீ விபத்து
x

கவுந்தப்பாடி அருகே சவுக்கு தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது

ஈரோடு

கவுந்தப்பாடியில் உள்ள ஈரோடு ரோட்டில் அய்யம்பாளையம் பிரிவு அருகே சாலையோரம் சவுக்கு தோப்பு ஒன்று உள்ளது. நேற்று சாலையோரம் இருந்த காய்ந்த புற்செடிகளில் திடீெரன தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி சவுக்கு தோப்பில் உள்ள செடி கொடிகளிலும் பற்றியது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுபற்றி தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், 'ரோட்டில் சென்றவர்கள் பீடியை புகைத்துவிட்டு புற்களில் வீசி விட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்,' என தெரிவித்தனர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story