கோபி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது;83 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல்

கோபி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த  2 பெண்கள் உள்பட 5 பேர் கைது;83 கிலோ மூலப்பொருட்கள் பறிமுதல்
x

கோபி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வெடி தயாரிக்க வைத்திருந்த 83 கிலோ எடையிலான மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு

கோபி

கோபி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வெடி தயாரிக்க வைத்திருந்த 83 கிலோ எடையிலான மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

ரோந்து

கோபியை அடுத்த திங்களூர் பகுதியில் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையில் திங்களூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது திங்களூர் அருகே உள்ள காசுக்காரன்பாளையம் கிரே நகர் செல்லும் ரோட்டில் ஒரு குடிசை வீட்டில் சிலர் சந்தேகப்படும் வகையில் வெடிபொருட்கள் செய்வது போன்று வேலைகள் செய்து கொண்டிருந்தனர். உடனே அவர்களை நோக்கி போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் ஓட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கைது

விசாரணையில், அவர்கள் காசுக்காரன்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 35), சகுந்தலா மணி (42), திவாகர் (29), பெரியசாமி (44), மவுலீஸ்வரன் என்பதும், அவர்கள் அரசின் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 83 கிலோ வெடி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இதில் தொடர்புடைய இளங்கோ என்பவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story