கோபி அருகே மலைத்தேனீக்கள் கொட்டி தாய்-மகன் மயக்கம்


கோபி அருகே மலைத்தேனீக்கள் கொட்டி   தாய்-மகன் மயக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2023 1:00 AM IST (Updated: 17 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

தாய்-மகன் மயக்கம்

ஈரோடு

கோபி அருகே உள்ள குளவிக்கரடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க மகன் ஞானப்பிரகாசம் (40) என்பவர் வந்தார்.

இந்தநிலையில் திடீரென எங்கிருந்தோ மலைத்தேனீக்கள் பறந்து அங்கு வந்தன. பின்னர் பொன்னம்மாளையும், ஞானப்பிரகாசத்தையும் மலைத்தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டின. உடனே 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனாலும் மயக்கம் அடைந்து 2 பேரும் கீழே விழுந்தனர். உடனே அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


Next Story