கோபி அருகேவாய்க்காலில் குதித்து பெண் தற்கொலைகுடும்ப தகராறில் விபரீத முடிவு


கோபி அருகேவாய்க்காலில் குதித்து பெண் தற்கொலைகுடும்ப தகராறில் விபரீத முடிவு
x

கோபி அருகே வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா் குடும்ப தகராறில் விபரீத முடிவு

ஈரோடு

கோபி அருகே குடும்ப தகராறு காரணமாக வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். அவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 28.) இவர் பனியன் கம்பெனி வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக பழனியம்மாள் கணவர் மகுடேஸ்வரனுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

வாய்க்காலில் குதித்து தற்கொலை

இதுகுறித்து மகுடேஸ்வரன் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை தேடி வந்தனர். இந்த நிலையில் சின்னகுளம் என்ற இடம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் பழனியம்மாள் நேற்று காலை பிணமாக மிதந்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக பழனியம்மாள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது.


Next Story