கோபி அருகே சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தாா்.
ஈரோடு
கோபி அருகே உள்ள கடுக்காம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளாங்கோவில் ஆலமரத்து பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு சாக்கடை திட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது தவறி சாக்கடையில் விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாக்கடையில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story