கொடுமுடி அருகேவிரிவாக்க பணிக்காக ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கொடுமுடி அருகே விரிவாக்க பணிக்காக ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் ரவுண்டானா முதல் காலிங்கராயன் வாய்க்கால் பாலம் வரை மற்றும் கரூர்-ஈரோடு ரோட்டில் வெள்ளபாளையம் முதல் கமிட்டி ரோடு வரை விரிவாக்கப்பணிக்காக ரோட்டோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், வீடுகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் விடுத்தனர். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு எடுத்தனர். இதையடுத்து கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் ரவி மற்றும் கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மோகன் சக்தி ஆகியோர் சாலை பணியாளர்களுடன் ஆக்கிரமிப்பு பகுதிக்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் நிலவியது. இதையொட்டி கொடுமுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு சில இடங்களில் அதிகாரிகள் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.