கொங்கர்பாளையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்50 வாழைகள் சேதம்
கொங்கர்பாளையம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்ததில் 50 வாழைகள் சேதம் அடைந்தன.
ஈரோடு
டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட கொங்கர்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள வெள்ளக்கரடு பகுதியை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவர் தன்னுடைய 1½ ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்தில் வாழை பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு ெவளியேறிய காட்டு யானை ஒன்று குமாரின் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதை கண்டதும், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர். தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்ததில் 50 வாழைகள் சேதம் ஆனது.
Related Tags :
Next Story