கோவில்பட்டி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
கோவில்பட்டி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக மேற்கு போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சேது மற்றும் போலீசார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது இனாம் மணியாச்சியில் ஒரு காரில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் எட்டயபுரம் அருகே உள்ள எட்டாக்குளத்தை சேர்ந்த வடிவேல் மகன் உச்சிமாகாளி (வயது 36), மாடசாமி என்ற மகாராஜா (55) என்பதும், ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 17 மூட்டைகளில் இருந்த 850 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.