குலசேகரன்பட்டினம் அருகேபெண் தூக்கு போட்டு தற்கொலை
குலசேகரன்பட்டினம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பறக்கை தெங்கம்புதூரைச் சேர்ந்த லிங்கம். தொழிலாளி. இவரது மனைவி வனஜா (வயது 44). இங்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு பெண்ணுடன் லிங்கத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை வனஜா கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடன்குடி தேரியூர் தென்றல்நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் குடியேறினர்.
தூக்கில் தொங்கினார்
ஆனாலும் லிங்கம் அந்த பெண்ணுடனான பழக்கத்தை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவதன்றும் இப்பிரச்சினை தொடர்பாக தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வனஜா வீட்டில் தூக்குபோட்டு தொங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முயன்று உடன்குடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் அங்கு சென்று, அவரது உடலை ைகப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இகுறித்து லிங்கம் மகன் வினோ அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.