மரக்காணம் அருகேபடகு கவிழ்ந்து கடலில் மீனவர்கள் தத்தளிப்புசக மீனவர்கள் மீட்டனர்


மரக்காணம் அருகேபடகு கவிழ்ந்து கடலில் மீனவர்கள் தத்தளிப்புசக மீனவர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவா்கள் மீட்டனர்.

விழுப்புரம்

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 46). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (21), மணிபால் (35), ரவி (24) மற்றும் ரஞ்சித் ஆகியோர் நேற்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்களை பிடித்து விட்டு மீண்டும் கடலில் இருந்து கரை திரும்பினர். அப்போது அவர்கள் வந்த பைபர் படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விட்டது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். இதைப்பார்த்ததும் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் அலையில் சிக்கிய 4 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் ரஞ்சித் மற்றும் ரவி ஆகியோர் மரக்காணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். கடலில் கவிழ்ந்த படகு சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது.


Next Story