மயிலாடும்பாறை அருகேகன்னிமார் கோவில் மலையில் காட்டுத்தீ


மயிலாடும்பாறை அருகேகன்னிமார் கோவில் மலையில் காட்டுத்தீ
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை அருகே கன்னிமார் கோவில் மலையில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

தேனி

மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை கிராமத்தில் கன்னிமார் கோவில் மலை அமைந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக சிறப்பாறை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மலையில் பெரும்பாலான மரம் மற்றும் செடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் கன்னிமார் கோவில் மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் தீ மளமளவென மலையில் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதில் ஏராளமான மரங்கள் தீயில் கருகின. காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் பாறைகள் அதிக அளவில் உள்ளது. அந்த பகுதியில் மரம், செடிகள் இல்லாததால் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு காட்டுத்தீ தானாக கட்டுக்குள் வந்தது. ஆனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் கண்டமனூர் வனத்துறையினர் மலைப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story