மொடக்குறிச்சி அருகே மது என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி சாவு


மொடக்குறிச்சி அருகே  மது என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 Oct 2022 1:00 AM IST (Updated: 13 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி சாவு

ஈரோடு

மொடக்குறிச்சி அருகே மது என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி இறந்தார்.

விஷத்தை குடித்தார்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 50). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மதுபோதையில் வீட்டில் இருந்த சின்னச்சாமி திடீரென வாந்தி எடுத்தார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் தான் மது என நினைத்து பூச்சி மருந்தை குடித்ததாக தெரிவித்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று 2 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

சாவு

அதன்பின்னர் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னச்சாமி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story