நாலாட்டின்புத்தூர் அருகே வழிப்பறி திருடர்கள் 5 பேர் கைது


நாலாட்டின்புத்தூர் அருகே  வழிப்பறி திருடர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூர் அருகே வழிப்பறி திருடர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி தலைமையில் போலீசார் நேற்று ஊத்துப்பட்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் அரிவாள் இருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் கடந்த மாதம் 27-ந்தேதி லிங்கம்பட்டி - கூசாலிபட்டி சாலையில் நடைபெற்ற சங்கிலி பறிப்பில் வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிந்தது.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, மோட்டார் சைக்கிள்களில் இருந்த கிழவிப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அழகுவேல் மகன் திவாகர் (வயது 29), அதே பகுதி மேலக் காலனியைச் சேர்ந்த கதிரேசன் மகன் வெற்றிச்செல்வன் (29), கீழக்காலனியைச் சேர்ந்த மகேஷ் மகன் செல்வகுமார் ( 20), அதே பகுதியைச் சேர்ந்த அழகப்பன் மகன் ஜோதிராஜ் (21) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லைச் சேர்ந்த ராஜகுமார் மகன் சாஜன் ( 24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிராம் தங்க நகைகள், 2 மோட்டார் மோட்டார்சைக்கிள்களையும், அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story