நாலாட்டின்புத்தூர் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
நாலாட்டின்புத்தூர் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயமாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
நாலாட்டின்புத்தூர்:
கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை ெசாக்கம்பட்டி மேல தெருவை சேர்ந்த சைவதுரை மகன் கனகமணி (வயது 36). இவரது மனைவி பூங்கனி(23). இவர்களுக்கு 1½ வயதில் மகிவர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. கனகமணி சென்னையில் இட்லி மாவு கடை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சொக்கம்பட்டி வீட்டில் பூங்கனி குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காளாம்பட்டியிலுள்ள கணவரின் உறவினர் வீட்டுக்கு பூங்கனி குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கிருந்து கடந்த 10-ந் தேதி கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு பூங்கனி சென்றுள்ளார். ஆனால் அவர் கைக்குழந்தையுடன் திடீரென மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கனகமணி ஊருக்கு திரும்பி வந்து மனைவி, குழந்தையை தேடியும் காணவில்லையாம். இதுகுறித்து கனகமணி கொடுத்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து, கைக்குழந்தையுடன் மாயமான பூங்கனியை தேடி வருகிறார்.