நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த பஸ்10 பயணிகள் படுகாயம்
நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து 10 பயணிகள் படுகாயம் அைடந்தனா்
நம்பியூர் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
பள்ளத்தில் பாய்ந்தது
அந்தியூரில் இருந்து நம்பியூர் வழியாக கோவைக்கு தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்றும் அந்த பஸ் அந்தியூரில் இருந்து கோவைக்கு புறப்பட்டது. பஸ்சை அந்தியூர் மாத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35) என்பவர் ஓட்டினார். பஸ்சின் கண்டக்டராக ஆறுமுகம் (56) என்பவர் இருந்தார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நம்பியூருக்கு வந்த இந்த பஸ் மாலை 3.30 மணி அளவில் அங்கிருந்து கோவை நோக்கி சென்றது. நம்பியூர் துணை மின்நிலையம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை முந்தி செல்ல பஸ் டிரைவர் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
படுகாயம்
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கோபியை சேர்ந்த லட்சுமி (55), சுமதி (46), மினி (23) உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினா் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நம்பியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.