நம்பியூர் அருகே லாரி மோதி கணவர் கண் எதிரே மனைவி பலி


நம்பியூர் அருகே   லாரி மோதி கணவர் கண் எதிரே மனைவி பலி
x

லாரி மோதி விபத்து

ஈரோடு

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ராக்கியாபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மனைவி சரோஜா (வயது 60). இருவரும் கோபி அடுத்துள்ள காசிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றார்கள். பின்னர் மீண்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள். நம்பியூர் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் வந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பின்னால் உட்கார்ந்து இருந்த சரோஜா வண்டியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சரோஜா இறந்தார். பழனியப்பன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story