நாசரேத் அருகேபஞ்சாயத்து துணைத்தலைவி மீது தாக்குதல்
நாசரேத் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு கீழத்தெருவை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மனைவி சக்திகனி (வயது 45). இவர் சின்னமாடன்குடியிருப்பு பஞ்சாயத்தில் துணைத் தலைவியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சங்கர் என்ற ராஜலிங்கம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சக்திகனியை ராஜலிங்கம் வழிமறித்து, அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த சக்திகனி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து சக்திகனி கொடுத்த புகாரின் பேரில் நாசரேதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜலிங்கத்தை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story