நாசரேத் அருகேபரிசுத்த உபகார மாதா ஆலய தேர் பவனி


நாசரேத் அருகேபரிசுத்த உபகார மாதா ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத் அருகே பரிசுத்த உபகார மாதா ஆலய தேர் பவனி நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகே பரிசுத்த உபகார மாதா ஆலய தேர்பவனி நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஆலய திருவிழா கொடியேற்றம்

நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 9-ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெப மாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை தூத்துக்குடி மறை மாவட்ட குருகுல முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றினார். இந்த ஆராதனையில் பங்குத்தந்தைகள் ரெமிஜியூஸ், ராபின், இருதயசாமி, கலை செல்வம் மற்றும் இறை மக்கள் பங்கேற்றனர்.

தேர்ப்பவனி

நேற்று காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையில் நடந்தது. தைலாபுரம் பங்குத் தந்தை ததேயுஸ் ராஜன் வரவேற்றார். சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றினார். காலை 10 மணிக்கு திரு முழுக்கு வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னையின் மற்றும் புனிதர்களின் திரு உருவ சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் விழாக்குழுவினர், கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.


Next Story