ஓட்டப்பிடாரம் அருகே தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையினர் ஆர்ப்பாட்டம்


ஓட்டப்பிடாரம் அருகே  தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில் குறுக்குச்சாலை பஸ்நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் உள்ள 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பறையர் இன மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு கக்கன் பெயர் சூட்ட வேண்டும். குறிஞ்சான்குளம் பறையர்களின் வழிபாட்டு உரிமையான காந்தாரி அம்மன் சிலையை அரசே நிறுவ வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மாவட்ட இளைஞரணி செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருப்புசாமி செல்வன், தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர் சந்தனராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் இளவரசபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையராஜா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராபின்பிரபாகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரசாத், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன் 76-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story