ஓட்டப்பிடாரம் அருகே செவிலியர் தூக்குபோட்டு தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே செவிலியர் தூக்குபோட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 10:07 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே செவிலியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே கணவர், குழந்தை ஆகியோர் இறந்த சோகத்தில் செவிலியர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செவிலியர்

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் காலனி தெருவை சேர்ந்த கணேசன் மனைவி பார்வதி (வயது 32). இவர் ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே இறந்த நிலையில், இவரது குழந்தையும் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது.

தூக்கில் தொங்கினார்

கணவரும், குழந்தையும் அடுத்தடுத்து இறந்ததால் இவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பார்வதியின் தாயார் வீட்டின் பின்பகுதியில் சென்றபோது, அங்கு சேலையால் பார்வதி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார். அவரது சப்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த பார்வதியை மீட்டு ஆட்டோவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவலியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story